ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 9 ஜனவரி 2024 (18:45 IST)

காங்கிரஸ் கட்சியின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா! – திருச்சியில் கொண்டாட்டம்!

Equality ponga;
தமிழரின் பாரம்பரிய பண்டிகையான சமத்துவ பொங்கல் விழா திருச்சி அருணாச்சலம்  மன்றத்தில் கொண்டாடப்பட்டது.


 
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் தலைவர்  சு.திருநாவுக்கரசர்  கலந்து கொண்டு பொங்கல் பரிசுகளான சேலை மற்றும் வேஷ்டி ஆகியவை பொதுமக்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகளுக்கும் வழங்கினார்.

இதனை தொடர்ந்து ''இந்தியா'' கூட்டணியை வரும் பாராளுமன்ற தேர்தலில்  40 தொகுதியிலும் வெற்றி பெறச்செய்து மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை அமைத்திட பாடுபடுவோம் என்று  திருநாவுக்கரசர்  தலைமையில் திருச்சி காங்கிரஸார் உறுதிமொழி எடுத்தனர் .

இந் நிகழ்வின் போது மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ், தெற்கு மாவட்ட தலைவர் பி.கோவிந்தராஜன், திருச்சி பாராளுமன்ற  தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர்  டி.பெனட் அந்தோணி ராஜ், ராமநாதபுரம் பாராளுமன்ற  தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர் திரு.ஸ்வர்ண சேதுராமன், சிறுபான்மைத்துறை மாநில துணைத்தலைவர் பேட்ரிக் ராஜ்குமார், வி..சந்திரன், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் முருகேசன், மாநில, மாவட்ட தலைவர்கள், கோட்டத்தலைவர்கள், வார்டு தலைவர்கள் மற்றும் துணை அமைப்பின் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.