வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 26 ஜூலை 2019 (07:59 IST)

முத்தலாக் மசோதா: ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையே முரண்பாடு

நேற்று பாராளுமன்றத்தின் மக்களவையில் முத்தலாக் மசோதா எதிர்க்கட்சிகளின் பெரும் அமளிக்கிடையே நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்த மசோதாவுக்கு அதிமுகவின் ஒரே எம்பியான ரவீந்திரநாத் ஆதரவு தெரிவித்தது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இதை மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது அதிமுக உறுப்பினர் அன்வர் ராஜா பேசியபோது, ' ‘இது முஸ்லிம்களுக்கு எதிரானது மட்டுமல்ல, இறைவனுக்கே எதிரான மசோதா. இதுவரை யாரும் செய்யாத வகையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அடக்கி ஆள நீங்கள் முயற்சி செய்துவருகிறீர்கள். 1948ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி இந்த அவையில் உரையாற்றிய டாக்டர் பாபா சாஹிப் அம்பேத்கர், ’முஸ்லிம் சமூகத்தினர் கிளர்ந்து எழும் வகையில் எந்த அரசும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு ஒரு அரசு செயல்படுமானால் அது புத்திசுவாதீனமற்ற அரசாகவே இருக்கும்  என்று கூறினார் 
 
ஆனால் அன்வர்ராஜா பேசியதற்கு அப்படியே எதிர்ப்பதமாக இந்த மசோதாவை தான் ஆதரிப்பதாக ரவீந்திரநாத் கூறியிருப்பது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முஸ்லீம்கள் அதிகம் வாழும் வேலூர் தேர்தல் இன்னும் ஒரு சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு கருத்தை பாராளுமன்றத்தில் அதிமுக எம்பி  வைத்துள்ளதால் அதிமுக கூட்டணியின் வெற்றி கேள்விக்குறியாகி உள்ளதாக எடப்பாடி தரப்பினர் அதிர்ச்சியாகி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
இந்த மசோதாவால் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த முரண்பாடு அதிகமாகி ஒரு பிரிவுக்கு காரணமாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன