1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 17 ஜூலை 2022 (17:45 IST)

கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு திமுக அரசின் அலட்சியமே காரணம்: ஈபிஎஸ்

edappadi
கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு திமுக அரசின் அலட்சியமே காரணம்: ஈபிஎஸ்
கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு திமுக அரசின் அலட்சியமே காரணம் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார் 
 
கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலம் என்ற பகுதியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து கொண்டு இருந்த மாணவி திடீரென மர்மமான முறையில் மரணமடைந்தார் 
அவரது மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் என மாணவியின் குடும்பத்தினர் உள்பட பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியது 
 
இந்த நிலையில் கள்ளகுறிச்சி சம்பவத்திற்கு முழுக்க முழுக்க காரணம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான அரசும் அவரது கீழ் இயங்கும் காவல்துறையின் தான் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டி உள்ளார் 
 
தமிழ்நாட்டில் மாணவிகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் உளவுத்துறை செயலற்றுப் போய் உள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.