வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 1 ஜூலை 2019 (16:51 IST)

ஆர்வம் காட்டாத ஈபிஎஸ்; அதிகாரத்தை பிடிக்கும் ஓபிஎஸ்? அதிமுகவில் அதகளம்!

மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்கள் யார் என்ற அறிவிப்பு வெளியாகாததற்கு ஈபிஎஸ் அணியே காரணம் என கூறப்படுகிறது. 
 
மாநிலங்களவைத் தேர்தல் வரும் ஜூலை 18 ஆம் தேதி நடக்க இருக்கிறது. சட்டமன்றத்தில் உள்ள தற்போதுள்ள எம்.எல்.ஏ.க்கள் பலத்தின்படி, திமுகவுக்கு 3 மாநிலங்களவை உறுப்பினர்களையும் அதிமுக 3 உறுப்பினர்களையும் பெறும் தகுதி உள்ளது.  
 
இந்நிலையில் தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில் திமுக தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. திமுக வேட்பாளர்களாக தொமுச பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சீட் கூட்டணி ஒப்பந்தத்தின் படி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதிமுகவை பொருத்தவரை கையில் இருக்கும் 3 சீட்டுகளில் ஒன்றை கூட்டை ஒப்பந்தத்தின்படி பாமகவிற்கு வழங்க வேண்டும். மூதமுள்ள இரண்டை அதிமுக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், ஈபிஎஸ் ஆதரவாலர்கள் யாரும் இதில் ஆர்வம் காட்டாத்தாலும், ஓபிஎஸ் தரப்பினர் அனைவரும் ஆர்வம் காட்டுவதாலும் யார் போட்டியிடுவார் என முடிவு செய்வதில் தாமதமகிறதாம்.