தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு - முதல்வர் எடப்பாடி அவசர ஆலோசனை

Last Modified வியாழன், 14 ஜூன் 2018 (10:39 IST)
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாவதால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

 
18 அதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் இன்று 1 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.
 
திமுக, டிடிவி தினகரன் அணி தரப்பினர் இந்த தீர்ப்பை எதிர்பார்த்து ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். ஆனால், இந்த தீர்ப்பை அதிமுக தரப்பு சற்று பதட்டத்துடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறது. ஏனெனில்,  அதிமுகவின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தீர்ப்பாக இது கருதப்படுகிறது.
 
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் ஜெயக்குமார் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் மற்றும் தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 
 
எந்த மாதிரியான தீர்ப்பு வந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற முக்கிய அம்சங்களை அவர்கள் முடிவெடுப்பார்கள் எனத் தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :