தலைமச்செயலக துப்புரவுப் பணிகள் – இஞ்சினியரிங் பட்டதாரிகள் விண்ணப்பம் !
தமிழக தலமைச்செயலகத்தில் உள்ள 14 துப்புரவுப் பணியாளர்களுக்கான காலியிடங்களுகு இஞ்சினியர் பட்டதாரிகள் உள்பட 4000 பேர் விண்ணப்பித்துள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் 10 பெருக்குபவர்கள், 4 துப்புரவு பணியாளர்கள் இடங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக கல்வித்தகுதி எதுவும் குறிப்பிடப் படவில்லை. ம்பள விகிதம் ரூ.15,700 முதல் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் ரூபாய் வரை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த பணிகளுக்கு 4,607 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் 677 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 3,930 பேருடைய விண்ணப்பங்க்ள் ஏற்கப்பட்டுள்ளன. இதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக பொறியியல் பட்டதாரிகள் பலரும் விண்ணப்பித்திருப்பது தெரியவந்துள்ளது. சமீபகாலமாக பொறியியல் பட்டதாரிகள் வேலை வாய்ப்பில்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.