வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 28 ஜூலை 2021 (06:57 IST)

பொறியியல் கல்லூரிகள் வகுப்புகள் தொடக்கம்: செமஸ்டர் தேதி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பதும் ஆன்லைனில் மட்டுமே தற்போது வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பொறியியல் கல்லூரிகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பொறியியல் கல்லூரிகளுக்கான வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது
 
பொறியியல் கல்லூரிகளுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 13ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. ஆகஸ்ட் 18 முதல் வகுப்புகள் தொடங்குவதால் மாணவர்கள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.