புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (18:50 IST)

அ.ம.மு.க. கட்சி பொறுப்பாளர்கள் வெளியேற்றம்... டி.டி.வி.தினகரன் அதிர்ச்சி...ஸ்டாலின் மகிழ்ச்சி

இன்னும் சில மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் வரவுள்ளதை அடுத்து தமிழகத்தில் உள்ள பிராதான கட்சிகள் தம் கூட்டணி குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். பல மாவட்டங்களில் தீவிரமாக பிரசாரமும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில்  மதுரையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த பலர் திமுகவில் இணைந்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
 
இன்று முக ஸ்டாலின் தலைமையில் நடந்த இணைப்பு விழாவில் அமமுக கட்சியின் மாவட்டச் செயலர் பருவாச்சி எஸ் . பரணீதரன் மற்றும் மாநில மாணவ்ர் அணி இணைச்செயலாளர் ஈரோடு எம். பிரபு ஆகிய முக்கியமான பொறுபாளர்கள் திமுகவில் இணைந்தனர்.
மேலும் இவ்விழாவில் திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் இ. பெரியசாமி, கரூர் மாவட்டக் கழக பொறுப்பாளர் வி.செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமமுகவில் இருந்து முக்கிய பொறுப்பாளர்கள் வெளியேறி திமுகவில் இணைந்துள்ளதால் டிடிவி தினகரன் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் அரசியல் விமர்சகர்களால் தெரிவிக்கப்படுகிறது.