பூஸ்டர் டோஸ் போட தகுதியானவர்கள் யார் யார்?
பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள் யார் என்ற விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி அவர்கள் ஜனவரி 10 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும் என அறிவித்திருந்தார். இன்று முதல் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதல் கட்டமாக மருத்துவர்கள் முன் களப்பணியாளர்கள் செவிலியர்கள் ஆகியோருக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் அதன் பின்னர் படிப்படியாக பொதுமக்களுக்கு செலுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள் யார் என்ற விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்...
1. 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளிகள், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள்.
2. இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி ஒன்பது மாதங்கள் முடிவடைந்தவர்கள் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியும்.
3. முதல் இரண்டு டோஸ் எந்த தடுப்பூசி போடப்பட்டதோ தற்போது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் அதே நிறுவன டோஸ்தான் போடப்படும்.