தமிழகத்தில் மின்சாரப் பேருந்து இயக்கப்படும் - அமைச்சர் அதிரடி

vijayabahaskar
Last Modified திங்கள், 10 ஜூன் 2019 (14:28 IST)
தமிழகத்தில் தனியார் பள்ளிப் பேருந்துகளில் ஆண்டுக்கட்டணம் அதிகளவு வசூலிப்பதாக பொதுமக்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து மக்கள் விடுத்த கோரிக்கைகளை பரிசீலிப்பதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் . விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தற்போது தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தொலையில் இருந்து பள்ளிக்கு வரவேண்டியதிருந்தால் பள்ளிக் கட்டணத்துடன் சேர்த்து பேருந்துக்கட்டணத்தையும் செலுத்திவருகிறார்கள். ஆனால் இதையே சாக்காக வைத்து பல பள்ளிகள் பெற்றோரிடமிருந்து அதிகளவில் பணத்தைக் கறந்து வருவதாக மக்கள்  தமிழக அரசிடம்  தெரிவித்தனர். மேலும் இதற்கு நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
 
இந்நிலையில் தற்போது மக்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து தமிழக அரசு தனியார் பள்ளிகளின் ஆண்டுக்கட்டணம் குறித்து பரிசீலிக்குமென போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 
சென்னை எம்.ஆர்.சி நகரில் பள்ளிப்பேருந்துகளை ஆர்ய்வு செய்த அவர் செய்தியாளர்களிடம்: தமிழகத்தில் விரைவில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :