மின் கணக்கீடு செய்யப்படுவது எப்படி? தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்
மின் கணக்கீடு செய்யப்படுவது எப்படி?
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக மின்சார ரீடிங் எடுக்கப்படவில்லை என்பதும், இதனால் முந்தைய மாத மின்கட்டணத்தை செலுத்தும்படி மின் வாரியம் அறிவுறுத்தி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தவறுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை எடுத்து மின்வாரிய அலுவலகம் இயங்கத் தொடங்கியது. இதனால் கடந்த சில நாட்களாக வீடுகளில் மின்சார கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இந்த கணக்கீட்டில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும், முந்தைய மாத கட்டணத்தை செலுத்திய மின்சார அளவீடுகளை கழிக்காமல் மொத்தமாக நான்கு மாதங்களுக்கு மின் கணக்கீடு ரீடிங் எடுத்துச் செல்வதாகவும் சிலர் குற்றம் சுமத்தினார்கள். இதுகுறித்து நடிகர் பிரசன்னாவும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை டுவிட்டரில் பதிவு செய்து பதிவு செய்து இருந்தார் என்பதை பார்த்தோம்
இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு மின்வாரியம் மறுத்துள்ளது. இதுகுறித்து மின் வாரியம் விளக்கமளித்துள்ளது. அதில் வழக்கமான முறைப்படி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் கணக்கிடப்படும் என்றும், ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக தற்போது நான்கு மாதம் கழித்து மின் கணக்கீடு எடுக்கப்பட்டுள்ளது என்றும், நான்கு மாத மின் நுகர்வுகளை, இரண்டு இரண்டு மாதங்களாக பிரிக்கப்பட்டு அதன் பின் கட்டணம் கணக்கீடு செய்யப்படுவதாகவும் மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும் மின் கட்டணத்தில் நுகர்வோர்களுக்கு சந்தேகம் இருந்தால் சமந்தப்பட்ட அலுவலகத்தை அணுகி தங்கள் சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்றும் மின்வாரியம் அறிவித்துள்ளது