Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாஜகவில் இருந்திருந்தால் பிரதமர் ஆகியிருப்பாரோ?- திருநாவுக்கரசரை கிண்டல் செய்த இளங்கோவன்

செவ்வாய், 10 ஜனவரி 2017 (15:27 IST)

Widgets Magazine

திருநாவுக்கரசர் மட்டும் பாஜகவில் இருந்திருந்தால் பிரதமர் ஆகியிருப்பாரா என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.


 

சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசும்போது, அதிமுகவில் மட்டும் தான் நீடித்திருந்தால் தற்போது முதல்வராகவே ஆகியிருப்பேன் என்று கூறினார். இவரது இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஈரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையின் உள்ள ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி 3 வது நாளாக நடைபெறும் போராட்டத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்று இவர்களின் கோரிக்கை நியாயமானது. அரசு இவர்களது கோரிக்கையை உடனடியாக ஏற்க வேண்டும்.

காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தான் அதிமுகவில் இப்போது இருந்திருந்தால் முதல்வர் ஆகியிருப்பேன் என்று கூறியுள்ளார். இது அவரது தனிப்பட்ட கருத்து. அப்படியானால் பாஜகவில் அவர் இருந்திருந்தால் பிரதமர் ஆகியிருப்பாரா? என்று கிண்டல் செய்தார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பொங்கல் கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்ப்பு

தசரா விடுமுறைக்கு பதிலாக கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் சேர்க்கப்பட்டது.

news

உணவில்லா ராணுவ வீரர்கள்: இதற்கென்ன சொல்லுகிறீர்கள் தேச பக்தர்களே??

மத்திய அரசின் நிர்வாக சீர்கேட்டால், ராணுவ வீரர்கள் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் பட்டினியாக ...

news

பேஸ்புக் மூலம் கருத்தரித்த ஆண்

பிரிட்டனை சேர்ந்த 20வயது ஆண், பேஸ்புக் மூலம் விந்தணு தானம் பெற்று கருத்தரித்துள்ளார்

news

சசிகலாவின் பொது அறிவைக் கண்டு மெய்சிலிர்த்தேன் - மாலன் நாராயணன் கிண்டல்

இந்தியா டுடே நிகழ்ச்சியில் விபரம் தெரியாமல் உளறிய, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் பொது ...

Widgets Magazine Widgets Magazine