1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : திங்கள், 19 ஜூன் 2017 (09:19 IST)

கல்வித்தகுதியில் சிக்கிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்...

முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்பு அடி மேல், அடி அக்கட்சிக்கு விழுந்து வருவதை நாம் நாள்தோறும் ஊடகங்களிலும் நாம் கண்டு வரும் நிலையில் அமைச்சர் சரோஜா தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை திட்டிய செய்தியும், எம்.எல்.ஏ சரவணனின் பேட்டி அதாவது தனியார் தொலைக்காட்சிக்கு கொடுக்கும் பேட்டி டைம்ஸ் நவ்வில் வெளியானதுதான் தற்போது வைரலாகி வருகிறது.


 

 
இந்நிலையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செல்போன் எடுக்காத அமைச்சர்களில் நெம்பர் ஒன்னாகவும், இவரது கல்வித்தகுதி பிளஸ் ஒன் என்ற நிலையில், இவர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது வெளிவந்த அமைச்சர்களின் பட்டியல், அவர் இறந்த பிறகு ஒ,பன்னீர்செல்வம் தலைமையில் பதவிப்பிரமாணம் நடந்து வெளிவந்த அமைச்சர்கள் பட்டியல் மட்டுமில்லாமல் தற்போதைய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சர்கள் பட்டியல் என்று மூன்று முறை அமைச்சர்கள் பெயர் லிஸ்ட்டில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பி.ஏ என்று தான் வெளிவந்துள்ளது என்ற தகவல் தற்போது சட்டசபை நடக்கும் தருவாயில் பூதாகரமாகி வருகின்றது. 
 
மேலும் அவர் தேர்தலுக்கு முன்னர் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கிய தகவலில் அவர் பிளஸ் ஒன் முடிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.  அப்படி முடிக்கப்பட்டிருந்தால் பிளஸ் டூ என்று தான் தந்திருக்க முடியும், ஆனால் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ படித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் 8 வது படித்திருக்கும் நபர் கூட தற்போது பட்டப்படிப்பு படிக்கும் எளிய முறை கல்வித்தகுதிக்கு வந்த நிலையில், இவர் பிளஸ் டூ படிக்காததினால் இவர் ஒப்பன் யுனிவர்சிட்டி மூலம் பயின்றவர் என்று ஒரு உதாரணத்திற்கு ஒப்புக் கொண்டாலும், தற்போது அவர் ஜெயித்த பிறகு அதாவது அதற்குள் பட்டப்படிப்பை முடித்தாரா ? தேர்தல் முடிந்து எம்.எல்.ஏ வாக பதவிப்பிராமணம் செய்து அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்வதற்குள் எப்படி பட்டப்படிப்பு முடித்தார் என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது.


 

 
மேலும் ஆங்காங்கே நடைபெறும் நிகழ்ச்சிகளை கட்சி தரப்பிலும் சரி, அரசு தரப்பிலும் சரி, நாள்தோறும் இவரது செல்போனுக்கு தகவல் கொடுத்தால் எப்போதுமே இவர் செல் எடுக்க மாட்டுகின்றார் என்ற தகவலும் தற்போது எதிர்கட்சி உறுப்பினர்களான தி.மு.க மட்டுமில்லாமல்  ஆளுகின்ற அ.தி.மு.க கட்சி எம்.எல்.ஏ க்களின் பிரிவுகளான ஒ.பி.எஸ் அணி எம்.எல்.ஏக்களிடையேயும், டி.டி.வி தினகரன் அணி எம்.எல்.ஏக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மேலும் இந்த கல்வித்தகுதி சர்ச்சை தொடர்ந்த நிலையில் இவரது வாகனத்தின் பதிவு எண் மூன்று ஏழுகளை கொண்டது. அதாவது TN 47 2277 என்ற எண் ஆகும், அதாவது முன்னாள் மறைந்த முதல்வரும், அ.தி.மு.க வின் நிறுவனருமான எம்.ஜி.ஆரின் கார் எண் TMX 4777. ஆக அம்மா (ஜெயலலிதா) உயிருடன் இருக்கும் போதே இவர் எம்.ஜி.ஆர் என்று நினைத்து எம்.ஜி.ஆரின் பாணியை கடைபிடித்தாரா ? இல்லையா ? என்ற சந்தேகமும் கரூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கரூர் நகர காவல்நிலையம் அருகே உள்ள நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அருகே நடைபெற்ற கூட்டத்தில் மக்களவை துணை சபாநாயகரும், அ.தி.மு.க வின் கொள்கைபரப்பு செயலாளருமான தம்பித்துரை இவரை எம்.ஆர்.விஜயபாஸ்கர் என்பதற்கு பதில் எம்.ஜி.ஆர் விஜயபாஸ்கர் என்று அழைத்தார் என்றால் இதை விட அ.தி.மு.க தொண்டர்களுக்கு நற்சான்று என்னவென்று சொல்வது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் ஞாயிற்றுக்கிழமையான (18-06-17) காலை 11 மணியளவில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சோதனையிட வந்தார். இந்நிலையில் நமது தொகுதி அமைச்சர் மற்றும் நமது கட்சிக்காரர் என்ற விதத்தில் இவரை காண காலை 10 மணிமுதலே அரசு மருத்துவமனை அருகே திரண்ட அ.தி.மு.கவினரை சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக வந்த அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் இங்கு உங்களை (அ.தி.மு.க) கட்சி நிர்வாகிகளை யார் வரசொன்னது? எல்லோரும் பயணியர் மாளிகைக்கு செல்லுங்கள் என்று கூறினார். அதையடுத்து அங்கிருந்த அ.தி.மு.க வினர் புலம்பியபடி உங்களையெல்லாம் பார்க்க வந்தோமே என்று புலம்பியபடி சென்றனராம்.
 
மேலும் அங்குள்ளவர்கள் சிலர் அ.தி.மு.க கட்சியினர் தான் தற்போது மூன்றாக பிரிந்து விட்டனர். தற்போது உள்ளாட்சி தேர்தல் வருகின்றது ஆதலால் அ.தி.மு.க மூன்றுபட்ட நிலையில் நமக்கு வாக்குவங்கிக்காக பொதுமக்களிடம் இந்த நாடகம் என்றும் கூறி சென்றனராம்.
 
இந்த அமைச்சரின் செய்கை மற்றும் கல்வித்தகுதி சர்ச்சையோடு, செல்போன் எடுக்காத நிலை இது எல்லாம் அ.தி.மு.க கரூர் மாவட்டத்திற்கு வந்த சோதனையா? இல்லை தமிழக போக்குவரத்து துறைக்கு வந்த சோதனையா ? என்று கேள்விகள் பொதுநல ஆர்வலர்களும், நடுநிலையாளர்களும் இடையே எழுந்துள்ளது.
 
சி.ஆனந்தகுமார் - கரூர்