வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 10 ஜூன் 2016 (12:59 IST)

"கல்வி வணிகமயமாகிறது" - ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

"கல்வி வணிகமயமாகிறது" - ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் கல்வி வணிகமயமாகிறது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
இது குறித்து, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் பள்ளிகள் 25 சதவீத இட ஒதுக்கீட்டுக் கொள்கையை முழுமையாக கடைப்பிடிக்காமல் இருக்கின்றது.
 
மேலும், இச்சட்டத்தின் அடிப்படையில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை மத்திய அரசு இந்த ஆண்டிற்கு வழங்கவில்லை என்ற காரணத்தை தனியார் பள்ளி நிர்வாகம் கூறி படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களிடம் கல்விக்கட்டணத்தை கட்ட நிர்பந்திக்கிறது. அவ்வாறு கல்விக்கட்டணத்தைக் கட்டவில்லையெனில் பள்ளியில் தொடர்ந்து படிப்பதற்கு உரிமை மறுக்கப்படுகிறது.
 
மேலும், தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப உயர்த்துவதாலும், நன்கொடை வசூலிப்பதாலும் சாதாரண நடுத்தர, ஏழை, எளிய மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.
 
ஏற்கனவே, தமிழக அரசு கல்விக் கட்டணத்தை ஒழுங்குமுறைப்படுத்த நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி சிங்காரவேலு கமிட்டியின் பதவிக்காலம் முடிந்துவிட்டதால், புதிய கமிட்டி அமைத்திட வேண்டும் என தெரிவித்துள்ளார்.