முதல்வரானதும் ஓ.பி.எஸ் செய்யாததை எடப்பாடி செய்தார் - எது தெரியுமா?
முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி இன்று முதன் முதலாக தலைமை செயலகம் வந்தார்.
ஆனால், அவர் எந்த அறையை பயன்படுத்துவார் என்பது சந்தேகமாக இருந்தது. ஏனெனில், 3 முறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டும், ஓ.பி.எஸ், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அறையை பயன்படுத்தாமல், ஒரு தனி அறையைத்தான் பயன்படுத்தினார்.
எனவே, எடப்பாடி பழனிச்சாமி அதே தனி அறையை பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் ஜெயலலிதா பயன்படுத்திய அதே அறைக்கு சென்று, அவரின் இருக்கையிலேயே அமர்ந்து முதல்வர் பணிகளை துவக்கினார்.
500 டாஸ்மாக் கடைகள் மூடல் உட்பட மொத்தம் 5 கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.