Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தினகரனை கைது செய்ய வியூகம் வகுக்கும் எடப்பாடி பழனிச்சாமி: இது நம்ம லிஸ்ட்லயே இலையே!

தினகரனை கைது செய்ய வியூகம் வகுக்கும் எடப்பாடி பழனிச்சாமி: இது நம்ம லிஸ்ட்லயே இலையே!


Caston| Last Updated: வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (09:43 IST)
ஆகஸ்ட் 5-ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் அதிமுகவின் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வர உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்தார். அதற்காக அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

 
 
இந்நிலையில் டிடிவி தினகரன் கட்சி தலைமை அலுவலகத்தில் நுழைந்தால் அவரை கைது செய்ய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தயாராக இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
 
வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் ஓபிஎஸ் அணியை அதிமுகவில் இணைக்க வேண்டும் என தினகரன் கெடு விதித்தார். இல்லையென்றால் கட்சி பணிகளில் தான் தீவிரமாக செயபடுவேன் எனவும் கட்சி அலுவலகத்துக்கு வருவேன் எனவும் தினகரன் கூறினார்.
 
இதனையடுத்து சில தினங்களுக்கு முன்னர் தினகரன் தனது ஆதரவாளர்களை ஆகஸ்ட் 5-ஆம் தேதி கட்சி அலுவலகத்துக்கு ஆலோசனை கூட்டத்துக்கு அழைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து தினகரனின் நுழைவை தடுக்க எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் அணியை இணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதே நேரத்தில் தினகரனை கட்சி அலுவலகத்தில் நுழைய விடக்கூடாது என்பது குறித்தும் அவ்வாறு அவர் கட்சி அலுவலகத்துக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி அவரை கைது செய்யவும் ஆலோசிக்கப்பட்டது.
 
தினகரன் தான் கைது செய்யப்பலாம் என்பதை அறிந்து ஆகஸ்ட் 5-ஆம் தேதி தனது ஆதரவாளர்களை கட்சி அலுவலகத்தில் அல்லாமல் வேறு இடத்தில் சந்திக்கலாம் என கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :