செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 18 மே 2020 (12:15 IST)

விவசாயிகளுக்கு கரண்ட் தருவது எங்க இஷ்டம்!– பிரதமருக்கு எடப்பாடியார் கடிதம்!

அடுத்த ஆண்டு முதல் விவசாய பணிகளுக்காக வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய போவதாக வெளியான தகவலை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் விவசாய பணிகளுக்காக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட மத்திய அரசு 2021 முதலாக அனைத்து விவாசியிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார திட்டம் ரத்து செய்யப்படும் என அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர், விவசாயிகளுக்கு மானியம் தரும் முடிவை தமிழக அரசிடமே விட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிகிறது.