1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 ஜூலை 2022 (10:11 IST)

எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்: என்ன காரணம்?

Edappadi
சமீபத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளிவந்து உள்ளதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் பிரியாவிடை நிகழ்ச்சிக்கு நாளை டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் உள்ள பல அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ளவிருக்கும் நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள டெல்லி பயணம் செய்ய உள்ளார் 
 
அதுமட்டுமின்றி டெல்லியில் பாஜக முக்கிய தலைவர்களை எடப்பாடிபழனிசாமி சந்திக்க உள்ளதாகவும் இருப்பதாக பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி விசிட் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது