வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 18 பிப்ரவரி 2021 (10:41 IST)

திமுகவிற்கு மனு வாங்கும் வேலை கூட கிடையாது - ஈபிஎஸ் நக்கல்!

திமுகவிற்கு இப்போது மனு வாங்கும் வேலை கூட கிடையாது, தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.

 
50 ஆண்டுகள் முன்பு செய்யப்பட்டு வந்த புகார் பெட்டி போன்ற விஷயங்களை ஸ்டாலின்  பிரச்சாரம் என்கிற பெயரில் செய்து வருகிறார், அனால் நாங்கள்  நவீனமாக சிந்தித்து '1100' என்கிற புகார் எண்னை மக்களுக்கு கொடுத்துள்ளோம். வீட்டில் இருந்தபடியே மக்கள் இந்த எண்ணிற்கு அழைத்து தங்களது குறைகளை தெரிவிக்கலாம், உடனே தீர்வு வழங்கப்படும்.
 
ஏற்கனவே நான் செப்டம்பர் மாதம் 1100 குறை தீர்ப்பு எண் பற்றிய அறிவிப்பை சட்டமன்றத்தில் மேற்கொண்டேன், அதன் பிறகு ஸ்டாலின் இந்த புகார் பெட்டி என்கிற நாடகத்தை நடத்தி வருகிறார். அப்போது அறிவித்த திட்டத்தை சென்ற வாரம் துவங்கியும் விட்டோம், இப்போது திமுகவிற்கு மனு வாங்கும் வேலை கூட இல்லை.