Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாஜக கனவை தகர்க்க ஒன்றிணைய வேண்டும் - குட்டிக்கதை மூலம் உணர்த்திய எடப்பாடி

சனி, 6 மே 2017 (12:25 IST)

Widgets Magazine

அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
அதிமுக தற்போது இரு அணிகளாக பிரிந்து கிடக்கிறது. ஜெ.வின் மரணம் குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும், சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்கிற ஓ.பி.எஸ் அணியினரின் கோரிக்கையை எடப்பாடி அணி ஏற்காததால், இதுவரை அணிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தையே நடைபெறாமல் இருக்கிறது. எனவே, ஓ.பி.எஸ் தன்னுடைய ஆதரவாளர்களோடு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்கி விட்டார்.
 
இந்நிலையில், மதுரையில் நேற்று நடந்த ஒரு விழாவில் முதல்வர் எடப்படி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ஜெ.வின் பாணியில் ஒரு குட்டிக்கதை கூறினார்.
 
கூட்டம் கூட்டமாக பறக்கும் புறாக்களை பிடிக்க ஒரு வேடன் திட்டமிட்டு, அதற்காக வலை ஒன்றை விரித்து வைத்தான். அதில் சில புறாக்கள் சிக்கிக் கொண்டன. அதைக் கண்டதும், அந்த பறவைகளை பிடிக்க வேடன் ஓடி வந்தான். அனால், இதைக் கண்ட மற்ற புறாக்கள் அந்த வலைக்குள் சென்று சிக்கிக் கொண்ட புறாக்களுடன் சேர்ந்து அந்த வலையை தூக்கிக் கொண்டு ஒன்றாக பறந்து சென்றுவிட்டது. எனவே, ஒற்றுமையுடன் இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என அவர் கூறினார். 
 
அவர் பாஜகவைத்தான் வேடன் என சொல்கிறார் என அங்கிருந்த அதிமுக தொண்டர்கள் பேசிக் கொண்டனர். 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

கொடநாடு கொலை வழக்கு - தினகரன் சசிகலாவிடம் விசாரணை?

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை விவகாரம் ...

news

விஷ வாயு தாக்கி 1000 பள்ளி குழந்தைகள் மயக்கம் - டெல்லியில் அதிர்ச்சி

விஷ வாயு காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிக்குழந்தைகள் மயக்கமடைந்த சம்பவம் டெல்லியில் ...

news

நிர்வாண பட அழகியின் காலை குதறிய சுறா மீன் - அதிர்ச்சி வீடியோ

அமெரிக்காவின், புளோரிடா மகாணத்தை சேர்ந்த மடல் அழகி மோலி கவாலி என்பவர், சம்ஸோடா என்ற ...

news

விசா பெற ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்கு அவசியம்; ட்ரம்ப் உத்தரவு

அமெரிக்கா விசா பெற ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்கு விவரங்களை குறிப்பிட வேண்டும் என அதிபர் ...

Widgets Magazine Widgets Magazine