ஜூலைலயே சொல்லிட்டோம்... நீட் குறித்து எடப்பாடியார்!!
நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ள நிலையில் மத்திய அரசு நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்தக்கூடாது என மேற்கு வங்கம் உள்ளிட்ட 7 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளன.
இந்நிலையில் இந்த நீட் விவகாரம் குறித்து பேசியுள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ, நீட் தேர்வு விவகாரத்தை பொறுத்தவரை நீட் தேர்வு நம் கையை விட்டு போய்விட்டது என்று கூறியுள்ளார். ஆனால் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோ நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.
அவர் பேசியதாவது, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்று ஜூலை மாதமே பிரதமருக்கு கடிதம் எழுதியாகிவிட்டது. ஆனால் தற்போது நீட் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலுயுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.