சபாநாயகர் நடுநிலையாக இல்லை, கட்சிக்காரர் போல நடந்து கொள்கிறார்: ஈபிஎஸ்
சபாநாயகர் நடுநிலையாக நடந்து கொள்வதில்லை என்றும் கட்சிக்காரர் போல நடந்து கொள்கிறார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சேலத்தில் இன்று எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தபோது சபாநாயகர் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு நடுநிலையாக நடந்து கொள்வதில்லை என்றும் சட்டப்பேரவை தலைவர் பொதுவானவர், ஆனால் அவர் கட்சிக்காரர் போல நடந்து கொள்கிறார் என்றும் தெரிவித்தார்.
சட்டப்பேரவை மரபை மதிக்காதவர் சபாநாயகர் அப்பாவு என்றும் அவர் எங்களை மதிக்கிறாரோ இல்லையோ அவரை நாங்கள் மதிக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் தன்னை மிரட்டியதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்த ஒரு சில நிமிடங்களில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் அப்பாவு குறித்து கடும் விமர்சனம் வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Mahendran