1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 31 மார்ச் 2024 (11:23 IST)

அதிமுக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான்: ராஜேந்திர பாலாஜி

அதிமுக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளர் மோடி என்று பிரச்சாரம் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்தியா கூட்டணியின் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை தெரிவிக்கும் பிரச்சாரம் நடந்து வருகிறது.

இந்த நிலையில் பாஜக கூட்டணியிலும் இல்லாமல் இந்தியா கூட்டணியிலும் இல்லாமல் இருக்கும் அதிமுகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்ட கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எங்கள் பிரதமர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று கூறியுள்ளார்

இந்தியாவிலேயே அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஒன்றுதான் மத்திய அரசையும் எதிர்த்து மாநில அரசையும் எதிர்த்து குரல் கொடுக்கிறது என்றும் இந்த கட்சி போல் இந்தியாவில் ஒரு கட்சியும் இல்லை என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்

ஒரே ஒரு எம்பி யை வைத்துக்கொண்டு ஐகே குஜ்ரால் பிரதமராகவில்லையா? அதுபோல் எடப்பாடி பழனிசாமியும் கண்டிப்பாக பிரதமர் ஆவார் என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

Edited by Siva