Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நாளை வரை பழனிச்சாமி முதல்வராக நீடிப்பாரா? -பொன். ராதாகிருஷ்ணன் கிண்டல்


Murugan| Last Modified வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (13:57 IST)
எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் நிரந்தர முதல்வராக நீடிப்பாரா என்பது சந்தேகமே என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

 

 
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற பின், இதுவரை 3 முதலமைச்சர்களை சந்தித்துள்ளது தமிழகம். ஜெ.விற்கு பின் ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றார். அதன் பின் சசிகலா முன்னிறுத்தப்பட்டார். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பின் காரணமாக, அவர் விலக வேண்டியதாயிற்று. அதன்பின் அவர் எடப்பாடி பழனிச்சாமியை முன்னிறுத்தினார். தற்போது அவரே முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், நாளை கூடும் சட்டப் பேரவையில், அவர் தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் நிலையில் இருக்கிறார்.
 
இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் “கடந்த 50 வருடங்களாக தமிழகத்தில் ஆட்சி அமைத்த திராவிட கழகங்களின் ஆட்சி முடிவடையும் நேரம் வந்துவிட்டது. தற்போது முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமியை சசிகலா தரப்பு சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க மாட்டார்கள்.  நாளை வரை அவர் முதல்வராக நீடிப்பாரா என்பது சந்தேகம்தான்” என அவர் கிண்டலடித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :