திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 3 டிசம்பர் 2019 (17:27 IST)

அரசு வேலை, 10 லட்சம் பணம், புதிய வீடு! – முதல்வர் அறிவிப்பு!

கோயம்புத்தூர் அருகே மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான இடத்தை சென்று பார்வையிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

மேட்டுப்பாளையத்தில் பங்களா ஒன்றின் சுற்றுப்புற சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்கள் குடும்பத்துக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் எனவும், சுவர் இடிய காரணமான பங்களாவின் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று சென்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு நிவாரணமாக 10 லட்சம் பணம், தகுதியின் அடிப்படையில் அரசு வேலை மற்றும் புதியதாக வீடுகளும் கட்டித்தரப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.