எடப்பாடி பழனிச்சாமி; முதல்வர்; கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கொண்டாட்டம்!

Sasikala| Last Updated: வியாழன், 16 பிப்ரவரி 2017 (12:53 IST)
சசிகலாவுக்கும், ஓ.பன்னீர் செல்வம் அணிக்கும் இடையில் நடைபெற்று வரும் அதிகாரப் போட்டியில் யார் தரப்பு ஆட்சி அமைக்கும் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்துப் பேசியுள்ளார்.இதனை தொடர்ந்து, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அறிவித்துள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவ், இன்னும் 15 நாட்களில் அவர் தனது  பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் கொண்டாட தொடங்கிவிட்டனர். மேலும் இன்று மாலை 4 மணியளவில்  எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வராக பதவியேற்பு விழா நடைப்பெறவுள்ளது.
 
இதனை தொடர்ந்து கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். மக்களவை  துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் கூட்டம் நடைப்பெற்று வந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வராக  பதவியேற்பு விழா நடைப்பெறவுள்ளதை கேட்டு உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :