செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 22 ஜனவரி 2021 (13:04 IST)

கோயம்புத்தூரில் சந்திக்கும் எடப்பாடியார் – ராகுல்காந்தி! – ஒரே நாளில் பிரச்சாரம்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சார பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், காங்கிரச் எம்.பி ராகுல்காந்தியும் ஒரே நாளில் ஒரே இடத்தில் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக தலைவர்கள் மட்டுமல்லாது தேசிய தலைவர்களும் அவ்வபோது தமிழகத்திற்கு தேர்தல் காரணமாக வர தொடங்கியுள்ளனர். சமீபத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை காண மதுரை வந்த ராகுல்காந்தி தற்போது மீண்டும் பிரச்சாரத்திற்காக தமிழகம் வர உள்ளார்.

நாளை தமிழகம் வரும் அவர் 25ம் தேதி பல இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி முதற்கட்டமாக நாளை கோயம்புத்தூரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். அதேசமயம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் நாளை கோயம்புத்தூரில் தனது பிரச்சாரத்தை நடத்துகிறார். ஒரே நாளில் ஒரே இடத்தில் இருவரும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.