வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: புதன், 15 பிப்ரவரி 2017 (20:44 IST)

ஆளுநரை மீண்டும் சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி: ஆட்சியமைக்க அழைக்க கோரி மனு

அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் எடப்பாடி பழைச்சாமி இரண்டாவது முறையாக ஆளுநரை சந்தித்து, எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு பட்டியலை கொடுத்து தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.


 

 
சசிகலா எதிரான உச்ச நீதிமனற தீர்ப்பை அடுத்து நேற்று எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து நேற்று மாலை ஆளுநரை சந்தித்து எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்து தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
 
ஆளுநர் இன்று வரை எந்த முடிவும் எடுக்காமல் மௌனம் காத்து வருகிறார். இந்நிலையில் மீண்டும் தற்போது எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்துள்ளார். ஆளுநர் சந்திப்பு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
 
124 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு எங்களிடம் உள்ளது. ஆளுநர் நிச்சயமாக ஜனநாயகத்தை காப்பர் என்ற நம்பிக்கை உள்ளது, என்றார்.