தமிழகத்துக்கு கூடுதல் ரேபிட் டெஸ்ட் கிட்கள் ! பிரதமரிடம் முதல்வர் வேண்டுகோள்!
தமிழகத்துக்கு கூடுதலாக ரேபிட் டெஸ்ட் கருவிகள் வழங்கப்பட வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1477 ஆக உள்ளது. கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கொரோனா எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 105 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை தமிழகத்தில் 411 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை பிரதமர் மோடியிடம் பேசியுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ‘தமிழ்நாட்டுக்கு கூடுதலாக ரேபிட் டெஸ்ட் கிட்கள் வழங்கவேண்டும்’ என்ற கோரிக்கையை வைத்துள்ளார். அதற்கு பதிலளித்துள்ள மோடி ‘நிச்சயமாக வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
மத்திய அரசு மொத்தமாக சீனாவிடம் இருந்து ரேபிட் டெஸ்ட் கிட்களை வாங்கி மாநில அரசுகளுக்கு வழங்கி வருவத் குறிப்பிடத்தக்கது.