செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 14 மார்ச் 2017 (17:56 IST)

எடப்பாடி பழனிசாமி ஊர் மக்கள் ஓபிஎஸ்-க்கு ஆதரவு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொந்த ஊர் மக்கள் சென்னை வந்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்துள்ளனர்.


 

 
சசிகலாவை எதிர்த்து வெளிய வந்த பிரகு ஓ.பன்னீர்செல்வத்துக்கு தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஓபிஎஸ் அணி அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற தீவிரமாக போராடி வருகிறது. 
 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக சின்னம் இரட்டை இலை தங்களுக்கு வேண்டுமென ஓபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊர் மக்கள் சென்னை வந்து ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 
மேலும் தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. இதனால் சசிகலா அணியினர் சற்று அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் சொந்த ஊர் மக்கள் ஓபிஎஸ்-க்கு ஆதரவளித்திருப்பது எடிப்பாடி பழனிசாமியை மிகவும் கவலையடையச் செய்துள்ளது.