வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 10 அக்டோபர் 2023 (15:59 IST)

திமுக எம்பி ஆ.ராசாவுக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி..!

a raja
திமுக எம்பி ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையாத சொத்துக்களை அமலாக்கத்துறை கையகப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கோவை ஷெல்டர்ஸ் புரமோட்டர்ஸ் நிறுவனம் ஆ.ராசாவின் பினாமி எனக்கூறி சொத்துக்களை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை  தனது X தளத்தில் பதிவு செய்துள்ளது.
 
 திமுக எம்பி ஆ ராசா பினாமி பெயரில் சொத்துக்களை வாங்கி இருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.  
 
ஏற்கனவே திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமானவரித்துறையினர் ரெய்டு செய்துள்ள நிலையில் தற்போது திமுக எம்பி ஆ ராசா அவர்களின் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தொடர்ந்து திமுக பிரபலங்களை மத்திய அரசு குறிவைப்பது, தேர்தல் நேரத்தில் முடக்குவதற்கா? என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் எழுப்பி வருகின்றனர்.
 
Edited by Siva