வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Muthukumar
Last Updated : வியாழன், 24 ஏப்ரல் 2014 (15:23 IST)

உத்தரவை மீறி இன்று வேலை செய்த 3 ஐ.டி. நிறுவனங்களுக்கு பூட்டு!

தேர்தல் நாளான இன்று தனியார் நிறுவனங்கள் செயல்படக்கூடாது என்றும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
 
இந்த உத்தரவை மீறிய 3 தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்ததோடு கடும் நடவடிக்கையையும் எடுத்துள்ளது.
 
அரசு உத்தரவுக்கு மாறாக செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்த 3, 500 பேரை தேர்தல் அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர். 3 ஐ.டி. நிறுவனங்களின் நுழைவாயில்களையும் தேர்தல் அதிகாரிகள் பூட்டி வைத்துள்ளனர்.

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் இயங்கி வரும் எச்.சி.எல்., டெக் மகேந்திரா, விப்ரோ ஆகிய நிறுவனங்க்ளே உத்தரவை மீறி இன்று செயல்பட்ட நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.