1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 27 நவம்பர் 2018 (13:07 IST)

செல்லூர் ராஜுவை மிஞ்சிய அடுத்த சைண்டிஸ்ட்: அமைச்சரின் ஐடியாவால் அலறிப்போன மின் ஊழியர்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விமானம் மூலம் மின்கம்பங்களை நடவேண்டும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருப்பது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஜெயலலிதா இருந்த போது யாரென்றே தெரியாத அமைச்சர்கள் எல்லாம் அவரின் மறைவிற்கு பின்னர் தைரியமாக வெளியே பேச ஆரம்பித்துள்ளனர். சர்ச்சைக் கருத்தைக் கூறுவதையே ஃபுல் டைம் வேலையாக செய்து வருகின்றனர் சில அமைச்சர்கள். பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. கஜா புயல் அம்மா அரசைக் கண்டு கூஜா புயலானது என கூறி சமீபத்தில் சர்ச்சையைக் கிளப்பினார்.
இந்நிலையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நவீன டெக்னாலஜி மூலம் விமானத்தைக் கொண்டு மின்கம்பங்களை நட வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளிடம் கூறினார்.
 
வெளிநாடுகளில் நடுக்கடலில் பாலம் கட்டும்போது நம்மால் விமானம் மூலம் மின்கம்பங்களை நட முடியாதா? என கேள்வி எழுப்பினார். அதற்கான டெக்னாலஜியை கண்டுபிடியுங்கள் என அவர் மின்வாரிய அதிகாரிகளிடம் கூறினார். இதனைக்கேட்டு அதிகாரிகள் ஷாக் ஆகினர். இவர்களுக்கு எங்கிருந்து இந்த மாதிரியான அறிவு வருகிறது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.