ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 9 செப்டம்பர் 2020 (15:31 IST)

ஸ்டாலின் பாராட்டைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுத துரைமுருகன் !

இன்று  திமுக கட்சியின் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க காணொலி காட்சி பொதுக்குழு கூட்டத்தில் புதிதாகக் கழக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுலும், து.பொதுச் செயலாளர்களாக  அண்ணன்கள் பொன்முடி-ஆ.ராசா ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனைப் பாராட்டி ஸ்டாலின், இடி, மின்னல், மழை என்று கலைஞரால் பாராட்டுப் பெற்றவர்கள் என்று கூறினார். இதைக்கேட்டு கண்ணீர் விட்டு அழுதார் துரைமுருகன்.

பின்னர் பேசிய துரைமுருகன், எம்ஜிஆர் என்னிடம் பாசம் காட்டி தன்னோடு வருமாறு கூறினாலும்,  என் தலைவர் கலைஞர் என் கட்சி திமுக என்று சொல்லிவிட்டேன் என நெகிழ்ச்சிடன் கூறினார்.