Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

5 ஆண்டுகள் ஓ.பி.எஸுக்கு ஆதரவு - துரைமுருகன் பேச்சால் பரபரப்பு


Murugan| Last Updated: வியாழன், 2 பிப்ரவரி 2017 (17:21 IST)
உங்கள் ஆட்சி முடியும் வரை நீங்களே முதல்வராக தொடர வேண்டும். அதற்கு திமுக ஆதரவு தரும் என திமுக துணைத்தலைவர் துரைமுருகன் பேசியது, சட்டசபையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 
நேற்று சட்ட சபை கூட்டத்தில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன.
 
பள்ளிக்குழந்தை போல் கைகளைக் கட்டிக் கொண்டு பவ்வியமாக பேசிய திமுக எம்.ல்.ஏ. புகழேந்தியை பார்த்து, பணிவுக்கே பணிவு காட்டும் என்னையே நீங்கள் மிஞ்சி விட்டீர்கள் என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியது அனைவருக்கும் சிரிப்பை வரவழைத்தது.
 
அதேபோல், ஓ.பி.எஸ் பேசும் போது, அதிமுக அரசு எத்தனையோ சாதனைகளை செய்துள்ளது. ஆனால், எதிர்கட்சி தலைவருக்கு அதை பாராட்ட மனம் வரவில்லை எனக்கூறினர். உடனே எழுந்து பேசிய துரை முருகன் “நான் உங்களை மனமாற பாராட்டுகிறேன். வரும் 5 ஆண்டுகளுக்கும் நீங்களே முதல்வராக இருக்க வேண்டும். உங்களுக்கு பின்னால் இருக்கும் சக்தியை பார்த்துக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால் நாங்கள் உங்களுக்கு ஆதரவு தருவோம்” எனக்கூறினார். 
 
இதுகேட்டு திமுக உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர். ஆனால், அதிமுக உறுப்பினர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்ததை பார்க்க முடிந்தது.
 


இதில் மேலும் படிக்கவும் :