1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (08:00 IST)

போலி நிறுவனங்களின் இயக்குனர் பட்டியலில் சசிகலா, உம்மன்சாண்டி

போலி நிறுவனங்களின் இயக்குனர் பட்டியலை மத்திய கம்பெனி விவகாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அதிமுக பொதுச்செய்லாளர் சசிகலா, முன்னாள் கேரள முதல்வர் உம்மண்சாண்டி உள்பட பலர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன



 
 
சமீபத்தில் மத்திய கம்பெனி விவகாரத்துரை செயல்படாத 2.09 லட்சம் நிறுவனங்களின் உரிமைகளை அதிரடியாக ரத்து செய்தது. இதனையடுத்து ரத்து செய்யப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளது.
 
இந்த பட்டியலில் சசிகலா, உம்மண்சாண்டி, ரமேஷ் சென்னிதாலா, தொழிலதிபர் யூசுப் அலி உள்பட பலர் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிறுவனங்களான ஃபேன்சி ஸ்டீல்ஸ் பிரைவைட் லிமிடெட், ரெயின்போ ஏர் பிரைவேட் லிமிடெட், சுக்ரா கிளப் பிரைவைட் லிமிடெட் இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் ஆகிய நான்கு நிறுவனங்களும் சசிகலாவின் பெயரில் இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.