திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 20 டிசம்பர் 2023 (07:13 IST)

வெள்ள பாதிப்பு: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை?

கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏராளமான சேதம் ஏற்பட்டுள்ளது என்பதும் தமிழ்நாடு அரசு தீவிரமாக தற்போது மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்பதையும் பார்த்தோம். மத்திய அரசின் உதவியால் ராணுவம் வரவழைக்கப்பட்டு வெள்ளத்தில் சிக்கி உள்ள மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்கனவே கடந்த சில நாட்களாக  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது வெள்ள பாதிப்பு குறைந்து விட்டாலும் மீட்பு பணி காரணமாக இன்னும் சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி தூத்துக்குடி, நெல்லையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தென்காசியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva