1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 2 நவம்பர் 2021 (07:58 IST)

இன்று 6 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை: மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் காரணத்தால் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் 6 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்
 
முதல் கட்டமாக விழுப்புரம் கடலூர் அரியலூர் திருவண்ணாமலை பெரம்பலூர் மற்றும் கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் ஒரு சில பகுதிகளில் கன மழை தொடர்ந்து பெய்து வருவதையடுத்து இன்னும் ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், அது குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது