செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 8 அக்டோபர் 2020 (10:54 IST)

அமெரிக்காவுக்கே போதை பொருள் கடத்திய மதுரைக்கார அண்ணாச்சி… கடைசி நேரத்தில் நடந்த திருப்பம்!

சென்னை விமான நிலையத்தில் அமெரிக்காவுக்கு செல்லும் பார்சல்களில் இருந்து போதைக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

மதுரையில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த கொரியர் ஒன்று அமெரிக்காவுக்கு செல்ல இருந்தது. அதில் போதை மருந்துகள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வரவே அவர்கள் சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த பார்சல்களில் அல்பிரஸோலம், லோராசேபம், குலோனசேபம், டயசேபம் போன்ற மாத்திரைகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மாத்திரைகள் மருத்துவக் காரணங்களுக்காக மட்டுமில்லாமல் போதை மருந்தாகவும் அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகின்றன. இதையடுத்து கூரியர் அலுவலகத்தில் போதை பொருட்களை அனுப்பிய மதுரையை சேர்ந்த மொத்த மருந்து விற்பனையாளரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.  இச்சம்பவமானது சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.