திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (12:13 IST)

எமர்ஜென்சி வார்டில் போதையில் ஆட்டம் போட்ட நபர்.. மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பரபரப்பு..!

மன்னார்குடி அரசு மருத்துவமனையில் எமர்ஜென்சி வார்டில் திடீரென போதை நபர் ஒருவர் நுழைந்து ரகளையில் ஈடுபட்டதை அடுத்து அங்கிருந்த நோயாளிகள் கடும் அச்சம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் போதையில் உள்ள ஆசாமிகள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர் என்பதும் அவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்ற செய்தி வெளியாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்று காலை மன்னார்குடி அரசு மருத்துவமனையில் திடீரென மது போதையில் ஒருவர் புகுந்து அங்கிருந்த இருக்கைகளை தூக்கி வீசியாகவும் அங்கும் இங்கும் அவர் கத்திக்கொண்டே ஓடியதால் நோயாளிகள் மற்றும் நோயாளிகளை கவனித்துக் கொள்ள வந்த உறவினர்கள் அச்சமடைந்ததாகவும் தெரிகிறது. 
 
உடனடியாக இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் விரைந்து வந்து போதையில் அவசர சிகிச்சை பிரிவில் சூறையாடிய நபரை கைது செய்தனர். அவரிடம் போதை இறங்கியவுடன் விசாரிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
 
ஒரு அரசு மருத்துவமனையில் எந்தவித பயமும் இன்றி போதையில் ரகளை செய்த நபரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
Edited by Siva