1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 19 பிப்ரவரி 2020 (14:38 IST)

பேருந்தில் வரும் பெண்களிடம் பேசக்கூடாது: டிரைவர்களுக்கு புதிய உத்தரவு!

அரசு பேருந்து ஓட்டுனர்கள் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களிடம் பேசக்கூடாது என கோயம்புத்தூர் போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.

கோயம்புத்தூர் போக்குவரத்து கழகத்துக்கு உட்பட்ட திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் மொத்தமாக 2700 பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் விபத்தில் சிக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கோயம்புத்தூர் போக்குவரத்து கழகம் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் பேருந்தில் பயணிக்கும் பெண்களை பேனட்டில் உட்கார ஓட்டுனர்கள் அனுமதிப்பதும், முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் பெண்களுடன் பேசுவதுமாக இருப்பதால் கவனக்குறைவால் விபத்துகள் ஏற்படலாம் என சமூக ஆர்வலர்கள் பலர் பல சமயங்களில் புகார் அளித்துள்ளனர்.

பொதுமக்களின் புகாரை கணக்கில் கொண்ட கோயம்புத்தூர் போக்குவரத்துக் கழகம் வாய்மொழி உத்தரவாக சில நெறிமுறைகளை ஓட்டுனர்கள் கடைபிடிக்க வலியுறுத்தியுள்ளது. அதன்படி ஓட்டுனர்கள் பேருந்தில் பயணிக்கும் பெண்களை பேனட்டிம் அமர அனுமதிக்கக் கூடாது என்றும், முன் சீட்டில் அமரும் பெண்களிடம் பேசக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.