வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 4 ஜூன் 2024 (16:47 IST)

தென்காசியில் தொடர்ந்து 7வது முறையாக கிருஷ்ணசாமி தோல்வி! ஜான்பாண்டியனும் தோல்வி..!

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் ஏற்கனவே ஆறு முறை போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஏழாவது முறையாக போட்டியிட்டு மீண்டும் தோல்வி அடைந்துள்ளார். 
 
தென்காசி தொகுதி தேர்தல் முடிவுகள் வெளிவந்திருக்கும் நிலையில் அந்த தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் என்பவர் 338221 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 
 
அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிட்ட நிலையில் அவருக்கு கிடைத்த வாக்குகள் 182193  ஆகும். அதேபோல் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட ஜான்பாண்டியன் பெற்ற வாக்குகள் 156940  ஆகும். 
 
ஏற்கனவே ஆறு முறை போட்டியிட்டு தோல்வியடைந்த டாக்டர் கிருஷ்ணசாமி ஒவ்வொரு முறையும் தவறான முடிவு எடுத்திருக்கிறார் என்பதும் இந்த முறையும் அவர் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran