1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (13:39 IST)

திடீர் திருப்பம்.. திமுக கூட்டணியில் இணையும் புதிய தமிழகம்.. பேச்சுவார்த்தையில் கிருஷ்ணசாமி..!

அதிமுக அல்லது பாஜக கூட்டணியில் இணைந்து புதிய தமிழகம் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது திடீர் திருப்பமாக திமுக கூட்டணியில் புதிய தமிழகம் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி விறுவிறுப்பாக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி உனக்கு பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில் புதிய கட்சிகள் இந்த கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை என்றே கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தற்போது திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தென்காசி தொகுதி அவருக்கு ஒதுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த பேச்சு வார்த்தை குறித்து அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் திமுக கூட்டணி சார்பில் தென்காசி தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிட்டால் அவர் வெற்றி பெறுவது உறுதி என்றும் கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதிகள் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran