1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 15 டிசம்பர் 2022 (23:01 IST)

கொரொனாவை அரவர நிலை பரவலாக கருத வேண்டாம்- WHO தலைவர் டெட்ரோஸ்

Tedros Adhanam
சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரொனா வைரஸ் பரவியது. இதையடுத்து, இந்தியா முதற்கொண்டு பல்வேறு  நாடுகளுக்கு கொரோனா பரவியது.

இதன் மூலம் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர்.தற்போது ஐந்தாம் அலை பரவலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்த  நிலையில், இந்த ஆண்டு முடிவடைய உள்ளது.

கொரொனா வைரஸ் பரவல் குறித்து அவசர  நிலை தேவைப்படுகிறதா ? என்பது பற்றி தீர்மானிக்க உலக சுகாதார அமைப்பு ஆலோசனை கூட்டம்  நடத்தும்.

இந்த நிலையில், வரும் 2023 ஆம் ஆண்டு முதல் கொரொனா வைரஸ் பரவலை உலகளாவிய அவசர நிலையாக கருத தேவையில்லை என உலக சுகாதாரத்துறை தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

Edited By Sinoj