திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 31 ஜூலை 2019 (17:44 IST)

அமமுகவில் இருந்து விலகவில்லை - பிரபல நடிகர் விளக்கம் !

தினகரன் தலைமையை விரும்பி வந்ததுள்ளேன். அமமுகவை விட்டு விலகும் எண்ணம் இல்லை என நடிகர் ரஞ்சித் விளக்கம் கொடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு பாமக கட்சி நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் அக்ககட்சியில் இணைந்தார் பிரபல நடிகர் ரஞ்சித். இந்நிலையில் கட்சியின் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து, அக்கட்சியிலிருந்து விலகிய அவர் ,பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு பிப்ரவரி 27-ந் தேதி   அமமுக கட்சியில் இணைந்து பரபரப்பு ஏற்படுத்தினார்.
 
இந்நிலையில் கடந்த வாரம் நடிகர் ரஞ்சித் அமமுகவில் இருந்தும் விலகுகிறார் என்று தகவல்கள் வெளியானது. இதுகுறித்து அவர் கூறியதாவது :
 
நான் அமமுகவில் தான் இருக்கிறேன். எதையும் எதிர்பார்த்து நான் அரசியலுக்கு வரவில்லை. அதனால் எனக்கு எவ்வித ஏமாற்றமும் அடையவில்லை. தினகரன் தலைமையை விரும்பிதான் இக்கட்சிக்கு வந்தேன். அதனால் அமமுக கட்சியை விட்டு விலகும் எண்ணம் இல்லை என்றார் 
 
மேலும்  கடந்த ஒரு வாரமாக என்னை பற்றி வந்த செய்திகள் சங்கடத்தை ஏற்படுத்தியது என்று தெரிவித்தார்.