கருணாநிதியுடன் ஸ்டாலினை ஒப்பிட வேண்டாம் - வைரமுத்து
கருணாநிதியுடன் ஸ்டாலினை ஒப்பிட வேண்டாம் - வைரமுத்து
கருணாநிதியுடன் ஸ்டாலினை ஒப்பிடாதீர்கள் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2018 ஆம் வருடம் ஆக்ஸ்டு மாதம் இறந்தார். அதன் பிறகு திமுக கட்சிக்குள் உள்கட்சி போர் வரும் தலைமைப் பதிவுக்கு போட்டி வரும் என பலரும் தெரிவித்து வந்த நிலையில், ஸ்டாலின் திமுகவின் தலைமைப் பதவிக்கு வந்தார். கடந்த வருடம் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் திமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் வைரமுத்து ஸ்டாலின் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், கருணாநிதியுன் ஸ்டாலினை ஒப்பிடாதீர்கள். அந்த ரோஜா வேறு இந்த ரோஜா வேறு என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சாதி, மதம்,கட்சிகள், கார்பரேட் நிறுவனங்களால் தமிழகம் துண்டாடப்பட்டுள்ளது. கருணாநிதி மறைவுக்குப் பிறகு திமுக சிதறும் என்று கூறினார்கள். ஆனால் கட்சி உடையவும் இல்லை. சிதறவும் இல்லை என தெரிவித்துள்ளார்.