1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 4 ஜூன் 2018 (12:37 IST)

என்னை 'ஜல்லிக்கட்டு நாயகன்’ என அழைக்க வேண்டாம்: துணை முதல்வர் ஓபிஎஸ்

இந்நாள் துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2017ஆம் ஆண்டு முதல்வராக இருந்தபோது தான் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றது. மெரீனாவில் வரலாறு காணாத வகையில் நடந்த இந்த போராட்டம் காரணமாக அன்றைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஜல்லிக்கட்டு தனிச்சட்டம் இயற்ற காரணமாக இருந்தார். இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு தமிழகத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடந்து வருகிறது.
 
இந்த நிலையில் இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் எம்.எல்.ஏக்கள் பேசியபோது ஓபிஎஸ் அவர்களை 'ஜல்லிக்கட்டு நாயகன்' என்று புகழ்ந்து பேசினர். அவ்வாறு பேசி கொண்டிருந்தபோது துணை முதல்வர் ஒபிஎஸ் எழுந்து தன்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைக்க வேண்டாம் என்று கேட்டு கொண்டார்.
 
என் பெயரை சொல்லி அழைக்கும்போது ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என கூற வேண்டாம் என்றும் இவ்வாறு அழைத்து கொண்டிருந்தல் ஒருவேளை ஜல்லிக்கட்டு பார்க்கும்போது ஜல்லிக்கட்டு நாயகன் எனக்கூறி காளையை அடக்கச்சொன்னால் என் நிலைமை என்ன ஆகும்? என்று துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் கூறியபோது அவையில் சிரிப்பலை எழுந்தது