வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 6 அக்டோபர் 2015 (21:26 IST)

முதியவரின் காலில் கத்திரிக்கோலை வைத்து தைத்த மருத்துவர்கள்

அறுவை சிகிச்சையின் போது, தவறுதலாக முதியவரின் காலில் கத்திரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது.
 

 
கோவை ராமாநாதபுரம் பகுதியை அடுத்த கல்லுமடையை சேர்ந்தவர் கருப்புசாமி. இவர் கடந்த மாதம் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது கால் இடறி கீழே விழுந்திருக்கிறார். அதனால் அவரது இடது காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
 
நடக்க முடியாமல் அவதிப்பட்ட அவரை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், 15 நாட்கள் கழித்து அவருக்கு மீண்டும் காலில் பயங்கர வலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவர்களிடம் கூறியுள்ளனர்.
 
அப்போது அவருக்கு மீண்டும் மருத்தவ பரிசோதனை செய்து பார்த்த போது அவரது காலில் கத்திரிக்கோல் இருப்பது கண்டறியப்பட்டது.
 
இந்த சம்பவம் வெளியில் தெரிந்தால் மருத்துவமனைக்கு கெட்ட பெயர் வந்து விடும் என நினைத்த மருத்துவர்கள் உடனடியாக மீண்டும் அவரது காலில் அறுவை சிகிச்சை செய்து அந்த கத்திரிக்கோலை அகற்றியுள்ளனர்.