1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sasikala
Last Updated : வியாழன், 8 டிசம்பர் 2016 (16:08 IST)

ஜெயலலிதாவின் மனங்கவர்ந்த நாவல்கள் எது தெரியுமா??

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன் தினம் காலமானார். அவரது உடல் ராஜாஜி மஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.


 
ஜெயலலிதா தாம் மேற்கொண்ட செயல் எதுவாக இருந்தாலும் அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகளிலும் புலமை வாய்ந்த பெண்மணியாக திகழ்ந்த ஜெயலலிதாவுக்கு எழுத்துகள் மீது தீராத காதல் கொண்டுருந்தார். தன்னுடைய சிறு வயதிலேயே ஆங்கிலப் புத்தகங்களை படிப்பதில் ஆர்வம் கொண்டவர். இலக்கியத்தின் மீதும், எழுத்துகளின் மீதும் ஆர்வம் கொண்டிருந்தார்.
 
ஜெயலலிதா படிக்கும்போதே ஆங்கில காமிக்ஸ் புத்தகங்களை அதிகம் விரும்பிப் படித்தார். தன் மகள் படிப்பதற்காக தாய் சந்தியா ஏராளமான ஆங்கில காமிக்ஸ் புத்தகங்களை வாங்கிக் கொடுப்பார். ஒரே மூச்சில் பல காமிக்ஸ் புத்தகங்களைப் படிக்கும் ஆர்வம் அவருக்கு இருந்தது.
 
ஜெயலலிதாவுக்குப் பிடித்த இலக்கிய நூல் மகாபாரதம். அதுகுறித்து அவர், ‘அது வெறும் இலக்கியப் படைப்பு அல்ல; வாழ்க்கை முறையினை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டுமென்று உணர்த்தும், வழிகாட்டும் அருள்வாக்கு. பண்பாடு, கலாசாரம், சமூகவியல், அரசியல், யுத்த சாஸ்திரம் உள்பட அனைத்து சாஸ்திர அம்சங்களையும் உள்ளடக்கிய முழுமையான வாழ்க்கைக்குத் தேவையான பொக்கிஷம் அது’ என்று ஒருமுறை கருத்துத் தெரிவித்திருந்தார்.
 
ஆங்கிலத்தில் வெளியான திரில்லர், சமூகம், குடும்ப உறவுகள் கலந்த உணர்வு சம்பந்தமான நாவல்களை அதிகம் விரும்பிப் படித்தார். ‘‘புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியரான ஜங் சாங் (jung chang) எழுதிய ‘வைல்டு ஸ்வான்ஸ்: த்ரி டாட்டர்ஸ் ஆஃப் சைனா’ (Wild Swans: Three Daughters of china) என்கிற நாவல்தான் தன்னை மிகவும் கவர்ந்தவைகளில் ஒன்று’’ என ஓர் இதழுக்குப் பேட்டியளித்திருந்தார் ஜெயலலிதா.
 
ஜெயலலிதா எம்.பி-யாக இருந்த காலத்தில் எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கும் ராஜ்யசபா எம்.பி-யாக இருந்தார். அவர், ‘‘அழகாக இருக்கும் பெண்கள் புத்திசாலியாக இருக்கமாட்டார்கள் என நினைத்தேன். ஆனால், உங்களைப் (ஜெயலலிதாவை) பார்த்தவுடன் அந்தக் கருத்தை மாற்றிக்கொண்டேன்’’ என்று சொன்னது குறிப்பிடத்தக்கது.