வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 25 ஜனவரி 2024 (13:14 IST)

இளைஞரணி மாநாட்டிற்கு எதிர்பார்த்த கூட்டம் ஏன் வரவில்லை? நிர்வாகிகளை காய்ச்சி எடுத்த தலைமை?

சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெற்ற நிலையில் இந்த மாநாட்டில் எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை என திமுக தலைமை, மாவட்ட செயலாளர்களை  வறுத்து எடுத்ததாக கூறப்படுகிறது.  
 
திமுக இளைஞரணி மாநாட்டிற்கு ஒவ்வொரு மாவட்ட செயலாளர் குறைந்தது 25 ஆயிரம் பேரையாவது அழைத்து வரவேண்டும் என்று சொல்லி இருந்ததாகவும் ஆனால்  எதிர்பார்த்த கூட்டத்தில் பாதி கூட ஏன் வரவில்லை என்றும் தலைமை கேட்க அதற்கு யாரும் பதில் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. 
 
மேலும் ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் எத்தனை பேரை அழைத்து வருவதாக கணக்கு கொடுத்தார்கள்? எத்தனை பேரை அழைத்து வந்தார்கள்? ஆகிய பட்டியலை உடனே தலைமையிடம் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
இந்த விவகாரம் காரணமாக திமுக மாவட்ட செயலாளர்கள் சிலர் கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva